கடகம் ராசி அன்பர்களே..!
தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும்.
செலவுகள் அதிகமாக இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். திட்டங்களைத் தீட்டி வெற்றிப்பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணத்தால் அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் கூடும்.
குடந்தை பாக்கியங்கள் ஏற்படக் கூடும். தொலைதூரத்தில் இருந்து வரக்கூடிய தகவல் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சொந்தத் தொழில் புரிபவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.