தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அகவிலைப்படி(DA) பெறுவதற்கு தகுதியுள்ள ஏனைய பணியாளர்களுக்கு, அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இந்த DA உயர்வானது நடப்பாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 17% இருந்து 31% உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கூட்டுறவுச் சங்கம் பணியாளர்களுக்கு DA உயர்வு குறித்து அறிவிக்கப்படும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் கூட்டுறவுச் சங்கம் பணியாளர்களுக்கு DA உயர்வை நிறுத்தி வைத்திருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியாகியது. அதன்பின் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், கூட்டுறவுச் சங்கம் ஊழியர்களுக்கு DA உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் ரேஷன் கடைகள் சார்பாக அனைத்து தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள், முதல்வர் முக. ஸ்டாலின், கூட்டுறவுத் துறை அமைச்சரான ஐ.பெரியசாமி போன்றோருக்கு மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக அரசு மூலமாக புதிய ஊதிய உயர்வு ஆணை வெளியிட்டபோது, 114 சதவீதம் அகவிலைப்படியை 100 சதவீதம் அடிப்படை ஊதியத்தில் இணைத்து விட்டு, மீதம் 14 சதவீதம் அகவிலைப்படியை வழங்கலாம் என குறிப்பிடப்பட்டது.
இதனிடையில் அரசு ஊழியர்கள் DA உயர்வு பெறும் போது கூட்டுறவு பணியாளர்களுக்கு வழங்கலாம் என்று குறிப்பிடப்படவில்லை. அந்த வகையில் அதிமுக அரசு செய்த குழப்பத்தினை சுட்டிக்காட்டி கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கு இதுவரையிலும் அகவிலைப்படிக்கான அறிவிப்பு வழங்கப்படவில்லை. ஆகவே (DA) உயர்வினை நிலுவைத் தொகையுடன் சேர்த்து சீக்கிரம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது..