உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த 73 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்தாபேட்டை பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அதில் ராமகுப்பம் பகுதியில் வசிக்கும் அப்துல்லா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த 75 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் குருசாமியிடம் ஒப்படைத்துள்ளனர்.