Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….!! இனி சிறப்பு விடுப்பு கிடையாது…!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் என்.எம்.எம்.எஸ் (NMMS) மற்றும் என்.டி.எஸ்.இ (NTSE) ஆகிய தேர்வுகள் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வு பணிக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர்.இந்த தேர்வுகள் பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் எனவே அன்றைய தினம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிக்காலமாக கருதப்பட வேண்டுமென அரசு ஊழியர்கள் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன.

அதோடு ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இந்த தேர்வுக்கு அரசு ஊழியர்கள் பணி அமர்த்தப்படுவதால் அவர்களுக்கு அந்த தினத்திற்கு பதிலாக வாரத்தின் மற்றொரு நாளில் விடுப்பு அளிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதற்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் தேர்வுகளுக்கு பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கு அந்த தினம் பணிக்காலமாக கருதப்படும் என கூறியுள்ளது. ஆனால் வாரத்தின் மற்றொரு நாளை சிறப்பு விடுப்பாக அளிக்க முடியாது எனவும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |