செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எங்கள் இயக்கத்தை பொருத்தவரையில் எல்லாமே வந்து புரட்சித்தலைவி அம்மா மீதும்…. அதேபோல புரட்சித்தலைவர் மீதும்,,,, கட்சியின் மீதும் விஸ்வாசம் உள்ளவர்கள். ஊழியர் கூட்டம் இது. இது அறிமுக கூட்டம். இந்த அறிமுக கூட்டத்துல ஒரு பொதுவான அறிவுரை சொன்னோம்.
திமுகவைப் பொறுத்தவரையில் எப்போதுமே ஒரு குறுக்கு வழியில் தான் அவங்க எல்லாமே சாதிக்க நினைப்பாங்க. பொதுவாகவே அவங்களுக்கு குறைந்த கவுன்சிலர்கள் கிடைக்கும்போது, அதிகமான பணத்தை கொடுத்து ஏதாவது விளக்கு வாங்கலாமா அப்படிங்கற மாதிரி ஒரு என்ன வரும். அந்த எண்ணத்துக்கு யாருமே பாதிக்கப்பட்டு விடக்கூடாது. அப்படிங்கிற ஒரு கருத்துதான்.
அந்தக் கருத்து பொதுவாக எல்லோருக்கும் சொல்ல வேண்டிய விஷயம் அது. ஏனா பத்துநாள் இருக்குது. ஆள் கடத்து வாங்க, அதே போன்று எல்லா விதமான வேலைகளையும் செய்வாங்க. அந்த மாதிரி எதுக்கு வீக்காக கூடாது. நமக்கு வந்து பாட்டி, அம்மா, தலைவர் இப்படிதான் இருக்கணும். அப்படிங்கற மாதிரி ஒரு அட்வைஸ் அவ்வளவுதான் என தெரிவித்தார்.