Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரயிலில் கடத்தலா…. ரேஷன் அரிசி பறிமுதல்…. ரயில்வே போலீஸ் விசாரணை….!!

ரயிலில் கடத்த முயன்ற ரேஷன் அரிசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோம நாயகன் பட்டி ரயில் நிலையத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து பெங்களூரு செல்லும் பயணிகள் ரயிலில் கடத்த மர்ம நபர்கள் முயன்றுள்ளனர்.

இதைப் பார்த்த காவல்துறையினர் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அலுவலர் நடராஜனிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து ரயில் மூலம் வெளிமாநிலத்திற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற மர்மநபர்கள் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |