மராட்டியம் ,மேற்கு வங்காளம் மாநிலங்களில் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று ஒரு நாள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 92. இவர் பாரத ரத்னா போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இவரின் இறுதி சடங்கு நேற்று மாலை 6.30 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விட்டு துக்கம் அனுசரிப்பதாக கூறப்பட்டுள்ளது.
இவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்திவந்தனர். பிரதமர் மோடி அவர்கள் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிர அரசு பிப்ரவரி 7 (இன்று) ஒரு நாள் பொது விடுமுறை என அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க அரசும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்துள்ளது.