Categories
தேசிய செய்திகள்

அடடே…! இனி இவர்களுக்கும் ஓய்வூதியம்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

மறைந்த அரசு பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியம் குறித்த அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள நிலையில் மறைந்த அரசு பணியாளர்களுக்கும்,  மனநலம் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களிடம் பேசியதாவது; ஒரு சில வங்கிகளில் நீதிமன்றத்திலிருந்து பாதுகாவலர் சான்றிதழ் வாங்கி வந்தால் மட்டுமே மனநலம் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு ஓய்வூதியம் தரப்படும் என நிபந்தனை வைப்பதாக கூறப்பட்டுள்ளன.

இது வாரிசு நியமன நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது.   மத்திய அரசு சேவை  சார்ந்த ஓய்வுதிய  சட்டத்திற்கு எதிராகவும் உள்ளது . இதன் காரணமாக மறைந்த அரசுப்பணியாளர் வாரிசு என்று யாரை நியமனம் செய்துள்ளாரோ,  அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தால் கூட குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் மேலும் அவர்களிடம் சான்றிதழ் கேட்டு நிர்பந்திக்க கூடாது. இதுதொடர்பாக  சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளுக்கு   ஓய்வூதியம் வழங்கும் தலைவர்கள், மற்றும் நிர்வாக இயக்குனர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |