ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, யாஷ் தல் தலைமையிலான 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான ஐசிசி உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. இதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.அதோடு 1000 ஒருநாள் போட்டியில் விளையாடிய முதல் ஆண்கள் அணி என்ற பெருமையை பெற்றுள்ள இந்திய ஆண்கள் சீனியர் அணிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.
Categories