இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா . இவருடைய தந்தை திரிலோக்சந்த். இவர் ராணுவ அதிகாரி ஆவார். ராணுவத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றியுள்ளார். அதோடு இவர் வெடிகுண்டு தயாரிப்பில் கைதேர்ந்தவர் ஆவார். கடந்த சில காலமாக புற்றுநோயால் அவதியுற்று வந்த திரிலோக்சந்த் காசியாபாத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் மரணமடைந்தார். கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தையான திரிலோக்சந்தின் மூதாதையர் கிராமம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரெய்னாவாரி என்பது குறிப்பிடத்தக்கது.
Categories