Categories
தேசிய செய்திகள்

EPFO பயனாளர்களே!…. உங்க பணத்துக்கு பெரிய ஆபத்து…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ( EPFO ) தனிநபர் தகவல்கள் மற்றும் விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று தனது சந்தாதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சொந்த விவரங்களை பகிர்ந்து கொண்டால் உங்களுடைய பணம் திருடப்பட வாய்ப்புள்ளதாக EPFO எச்சரித்துள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் EPFO, “சந்தாதாரர்களின் UAN நம்பர், ஆதார் எண், வங்கி கணக்கு எண், OTP உள்ளிட்ட சொந்த விவரங்களை EPFO சமூக வலைதளங்கள் வாயிலாகவோ அல்லது போன் அழைப்பு மூலமாகவோ கேட்பதில்லை” என்று தெரிவித்துள்ளது.

மேலும் EPFO என்ற பெயரில் சில மோசடி கும்பல்கள் சந்தாதாரர்களின் சொந்த விவரங்களை கேட்டு பணத்தை கொள்ளை அடித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் நிறைய பணம் கிடைக்கும் என்று கூறி மோசடி கும்பல்கள் சந்தாதாரர்களை ஏமாற்றி வருகின்றனர். அதேபோல் கொஞ்ச பணம் டெபாசிட் செய்தால் போதும் நிறைய லாபம் பெறலாம் என்று கூறி பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். எனவே சந்தாதாரர்கள் யாரும் தங்களுடைய சொந்த தகவல்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று EPFO அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |