Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு…”சேமிப்பு நல்லது”…. விரும்பிய பதவி….!!

மேஷ ராசி அன்பர்களே…!! இன்று மதியத்திற்கு மேல் மனக் குழப்பம் ஏற்படும் நாளாக இருக்கும். சில பணிகள் மாறலாம். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடிக்க இயலாது. விரயங்கள் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களின் குணமறிந்து நடந்து கொள்வது நல்லது. இன்று வயிறு தொடர்பான நோய்கள் வராமல் பார்த்துக் கொள்வது சிறப்பு. பணப்பற்றாக்குறை ஏற்படலாம்.

சேமித்து வைப்பது ரொம்ப நல்லது. மாணவர்கள் இன்று மிகவும் கவனமாக படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். அலட்சியப் போக்கை கைவிடுவது ரொம்ப சிறப்பு. கலைத்துறையினருக்கு கவுரவம் இன்று உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே இன்று அன்பு இருக்கும். எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்று பயணங்களை மேற்கொள்ளும் பொழுது ரொம்ப கவனமாக மேற்கொள்ளுங்கள்.

கூடுமானவரை பொருட்கள் மீது கவனமாக இருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |