ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று தொலைபேசி வழி செய்தி சிந்திக்கவைக்கும் நாளாக இருக்கும். உங்களின் செயல்பாடுகளில் மற்றவர்கள் குறை கண்டுபிடிக்கலாம். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். தேக நலனில் தெளிவு பிறக்கும். இன்று வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.உங்கள் திறமைக்கேற்ற புகழும் பாராட்டுகளும் கிடைக்காமல் போகலாம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். மனதில் தைரியம் அதிகரிக்கும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்ததை எழுதிப் பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்