Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு…”வெளியூரில் இருந்து நல்ல தகவல்”…. காதல் கைகூட கூடிய சூழல்…..!!!

மிதுன ராசி அன்பர்களே…!!  இன்று நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாளாக இருக்கும். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இன்று பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் குறையும். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள்.

புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாகவே வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அவர்களுடைய திறமை இன்று பளிச்சிடும். இன்று கணவன் மனைவிக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை. சரியான முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் கூட ஒற்றுமை இருக்கும். அதுமட்டுமில்லாமல் காதல் கைகூட கூடிய சூழல் இருக்கு.

இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். பாடத்தில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |