நாடு முழுவதும் பரவி வரும் கொரானோ தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் மாசி மாத பூஜையில் பக்தர்கள் அனுமதி குறித்து ஆலோசனை நடைபெற்றது . அதில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதி நடைதிறக்கப்படுகிறது.
அன்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அதற்காக தினமும் 15 ,000 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம். 2 டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழ் (அல்லது) 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.