Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கழிப்பறையில் பதுங்கி இருந்த வாலிபர்…. ஓடும் ரயிலில் மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயிலில் பயணம் செய்த ஊழியரிடம் இருந்து பையை திருடி விட்டு கழிப்பறையில் பதுங்கி இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் இந்திரா நகரில் சுபாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் சென்னையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கேரளாவில் இருக்கும் உறவினரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுபாஷ் சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த ரயில் ஜோலார்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது சுபாஷின் அருகில் ஒரு வாலிபர் அமர்ந்துள்ளார். அந்த வாலிபர் சுபாஷ் தூங்கி கொண்டிருந்த சமயத்தை பயன்படுத்தி அவரது பையை திருடிவிட்டு கழிப்பறையில் ஒளிந்து கொண்டார். இதனை அடுத்து கண்விழித்து பார்த்த சுபாஷ் 6 பவுன் தங்க நகை, 11 ஆயிரம் ரூபாய் பணம் இருந்த பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து ரயில் பெட்டி முழுவதும் தேடி பார்த்துள்ளார்.

அப்போது கழிவறையின் கதவை சுபாஷால் திறக்க முடியவில்லை. இதுகுறித்து சுபாஷ் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் பூட்டை உடைத்து கழிவறையின் கதவை திறந்து பார்த்தபோது ஒரு வாலிபர் கையில் பையுடன் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் காட்பாடி கரசமங்கலம் பாரதி நகரில் வசிக்கும் குணசேகரன் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குணசேகரனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த பையை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |