ஸ்வீடனிலுள்ள நிறுவனம் ஒன்று காகங்களுக்கு தெருக்களில் கிடக்கும் சிகரெட் கழிவுகளை எடுத்து வர பயிற்சி கொடுக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வீடன் நாட்டிலுள்ள ஸ்டார்ட் அப் என்னும் ஸ்வீடிஷ் நிறுவனம் காகங்களுக்கு ஒரு வித்தியாசமான பயிற்சி ஒன்றை கொடுத்து வருகிறது. அதாவது தெருக்களில் கிடக்கும் சிகரெட் கழிவுகளை எடுத்துவரும் காகங்கள் அதனை மிஷின் ஒன்றில் போடும்படி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக காகங்களுக்கு நிலக்கடலையும் பரிசாக கொடுக்கப்படுகிறது. இந்த வித்தியாசமான பயிற்சி படிப்படியாக வெற்றி பெற்றால் சோடெர்டால்ஜி நகரில் காகங்கள் சிகரெட் துண்டுகளை சேகரிக்கும் பணியினை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.