5 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜூனியர் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் பி.சி.சி.ஐ செயலாளர் 40 லட்ச ரூபாய் ரொக்க தொகையை அறிவித்துள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய ஜூனியர் அணி 5 ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் அணியின் பி.சி.சி.ஐ தலைவரான சவுரவ் கங்குலி வாழ்த்தியுள்ளார்.
இதனையடுத்து பட்டம் வென்ற இந்திய ஜூனியர் அணியின் ஒவ்வொரு வீரருக்கும், துணை பணியாளர்களுக்கும் பி.சி.சி.ஐயின் செயலாளரான ஜெய் ஷா வெகுமதிகளை அறிவித்துள்ளார்.
அதன்படி ஜூனியர் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தலா 40 லட்ச ரூபாயும், துணை ஊழியர்களுக்கு ரூபாய் 25 லட்சமும் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பி.சி.சி.ஐ செயலாளர் பதிவிட்டுள்ளார்.