பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா. இவரிடம் இணையதளத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார்.
யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர். இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, கழுகு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன் பின்பு இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் தனது தோழிகளுடன் காரில் சென்றபொழுது சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். நடிகை யாஷிகாவின் கால், இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பல மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு தற்பொழுது அவர் பழைய நிலைமைக்கு வந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து வருவார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் யாஷிகாவிடம் ‘நீங்கள் கன்னித்தன்மையுடன் உள்ளீர்களா?’ என்று கேலியாக கேட்டுள்ளார். இந்த கேள்விக்கு சிறிது நேரம் கூட யோசிக்காமல் ‘இல்லை, ‘நான் யாஷிகா’ என அதிரடியாக பதில் அளித்துள்ளார். இவரின் இந்த துணிச்சல் பேச்சுக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.