Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. 2 வகையான வகுப்புக்கு அனுமதி…. அதிரடி அறிவிப்பு…!!!!

டெல்லியில் இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. அந்த வகையில் டெல்லியிலும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் பிப்ரவரி 7(இன்று) முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

மேலும் பள்ளி நிர்வாகம் நேரடி வகுப்புகள், ஆன்லைன் வகுப்புகள் என இரு வகைகளை பயன்படுத்தலாம். இதேபோல் பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளும் இன்று முதல் திறக்கப்படுகின்றன. இதனையடுத்து நீச்சல் குளங்கள், திரையரங்குகள், அரசு அலுவலகங்கள் போன்றவை முழுமையாக செயல்பட அனுமதி அளித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |