Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு…”திருமணம் கைகூடும்”….. பிரியமானவர்களின் சந்திப்பு…!!

சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று பிரியமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள் ஆகயிருக்கும். கனவு பலிக்கும். காலை நேரத்தில் மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்து சேரும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். இன்று திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும்.

தொழில் வியாபாரத்தில் நண்பர்களுடன் இருந்த பிரச்சனை தீரும். மனதில் அவ்வப்போது ஏதாவது கவலை இருக்கும். வீண் அலைச்சல் வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத சலுகை கிடைக் காமை போன்று இன்று ஏதாவது ஒரு பிரச்சனை ஒன்று இருந்து கொண்டே இருக்கும். அது உங்களுக்கு மன சோர்வை ஏற்படுத்தும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |