Categories
மாநில செய்திகள்

“நீட் தேர்வுக்கு எதிராக வலிமையான மசோதா நிறைவேற்றப்படும்.…!” மு.க ஸ்டாலின் அதிரடி பேச்சு…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோவை தொகுதியில் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது, “உள்ளாட்சியிலும் தொடரட்டும் நல்லாட்சி என்ற முழக்கத்தோடு இந்த உரையை நான் தொடங்குகிறேன். இவர்களுக்கு வாக்களித்தால் தான் தமிழகத்திற்கு விடியல் ஏற்படும் என்று மக்கள் முடிவு செய்து நம்மை ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள். 10 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரு கட்சியை வீழ்த்தி நாம் இந்த பொறுப்பில் அமர்ந்திருக்கிறோம் என்றால் அதற்கு மக்கள் நம் மீது கொண்ட நம்பிக்கை தான் காரணம். ஒரு கட்சி தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றியாக வேண்டும். ஆனால் நாம் ஆட்சியில் அமர்ந்து ஒரு வருடம் ஆகுவதற்கு உள்ளேயே முக்கால்வாசி வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். இதை எண்ணி நாம் பெருமிதம் கொள்ள வேண்டும் நீட் தேர்வு என்பது பல லட்சம் கொடுத்து பயிற்சி மையங்களில் படித்து அதன்மூலம் மருத்துவக் கல்லூரிக்குள் நுழையும் வசதி படைத்த மாணவர்களுக்கு அது பொருந்தும்.

ஆனால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட்தேர்வு எவ்வாறு பொருந்தும். இந்த வருடம் இல்லை என்றால் அடுத்த வருடம் லட்சக்கணக்கில் பணம் கட்டி பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்து மருத்துவர் ஆகிவிடலாம் என்பதெல்லாம் பணக்காரர்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் தான் சாத்தியமே தவிர ஏழை மாணவர்களுக்கு இல்லை. நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கவர்னர் திருப்பி அனுப்பி விட்டார் என்பது தெரிந்தும் மறுநாளே உடனடியாக மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மீண்டும் தீர்மானம் நிறைவேற்றினோம்.

இதனை அடுத்து நாளை நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நீட்டுக்கு எதிராக வலிமையான மசோதா ஒன்றை நிறைவேற்றுவோம். மருத்துவம் படித்து அதில் தேர்ச்சி பெற்று மருத்துவராகும் காலம் போய் படிப்பதற்கே உனக்கு தகுதி வேண்டும் என்று பழைய சூழ்ச்சியை மீண்டும் செயல்படுத்தி வருகிறது இந்த நீட். எப்படியாவது போராடி இந்த நீட்டுக்கு எதிரான தீர்மானத்தை விரைந்து நிறைவேற்றி தமிழகத்திற்கு வீட்டில் இருந்து விலக்கு அளிக்க முழு முயற்சியோடு ஈடுபடவேண்டும். விடியலில் வரும் சூரியனின் வெளிச்சம் போல மக்களின் வாழ்வுக்கு ஒளி கொடுக்கும் நம் ஆட்சியிலும் தொடர வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |