மீனம் ராசி அன்பர்களே…!! இன்று சிந்தித்து செயல்படவேண்டிய நாளாக இருக்கும். சேமிப்பு பணம் கரையும். சீரான உடல் நிலை மீண்டும் தொல்லைக் கொடுக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். குடும்ப சுமை கூடுதலாகத்தான் இருக்கும். கவலை கொஞ்சம் இருக்கும். இன்று அதிக உழைப்பும் குறைந்த வருவாயும் கிடைக்கும். நல்லது கெட்டது என பிரித்துப் பார்ப்பதில் இன்று வல்லவராக இருப்பீர்கள்.
அதே போல சிறிய தடுமாற்றங்களும் ஏற்படும். சிலருக்கு குடும்பத்தை விட்டு உத்தியோக நிமித்தமாக வெளியில் சென்று தங்க நேரிடும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது ரொம்ப நல்லது. அடிக்கடி கோபமாக பேச நேரிடும் கோபத்தை மட்டும் இன்று கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். உழைத்து பாடங்களைப் படியுங்கள். ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஊதா நிறம்