பிரபல சின்னத்திரை காமெடியனான அறந்தாங்கி நிஷாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே நிஷாவுக்கும் அவரது கணவர் ரியாஸ் அலிக்கும் பள்ளி செல்லும் மகன் இருக்கிறார். சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சி, திரைப்படங்கள் என பிஸியாகவே இருந்த நிஷா, ‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்’ என சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அவரது சொந்த ஊரான அரந்தாங்கியில் வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று நிஷாவுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற கனவு நீண்ட நாள்களுக்குப் பின் நிறைவேறியுள்ளதாக நிஷா தெரிவித்தார். மேலும் குழந்தைக்கு சஃபா ரியாஸ் எனப் பெயர் வைத்துள்ளதாக நிஷா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/p/B6nHtsBBOKx/?utm_source=ig_web_button_share_sheet