கர்நாடக மாநிலமான உடுப்பியிலுள்ள அரசு மகளிர் பியூ காலேஜில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஹிஜாப் அணிந்துகொண்டு வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்துபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமல்லாமல் கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். மேலும் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் உடுப்பியிலுள்ள அரசு கலை கல்லூரியில் ஹிஜாப் அணிந்துகொண்டு மாணவிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று குந்தபுராவிலுள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து செல்ல மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி வகுப்பறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.