Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அகற்றப்படாத கருவேல மரங்கள்…. நோய் பரவும் அபாயம்…. பொதுமக்கள் கோரிக்கை….!!

ஆற்றில்  உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வைப்பாற்றில்  கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வைப்பாற்றில்  10 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால்  ஆற்றில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் கழிவுகள் வெள்ளத்தில் அடுத்து செல்லப்பட்டு  கருவேல மரங்களுக்கு இடையில் சிக்கி துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் பொதுமக்களுக்கு  நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் சில இடங்களில்  மரங்கள் அகற்றப்படவில்லை.  எனவே கருவேல மரங்கள் மற்றும் கழிவுகளை அகற்றி ஆற்றை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள்  அதிகாரிகளுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |