குஜராத் மாநிலத்தில் சூரத்தை சேர்ந்த தம்பதியினரின் குழந்தையை, குழந்தை பராமரிப்பாளர் அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் சூரத்தை சேர்ந்தவர் மித்தேஷ் பட்டேல் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதனால் கடந்த செப்டம்பர் மாதம் தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக பராமரிப்பாளர் ஒருவரை நியமித்துள்ளனர் . இதனைத் தொடர்ந்து வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளனர். மேலும் வேலைக்கு சென்ற பட்டேலுக்கு அவரது தாய் போன் செய்து வீட்டிற்கு உடனே வருமாறும் இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை மயங்கி விழுந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி சென்றுள்ளனர். அப்போது குழந்தையை சோதித்த மருத்துவர் குழந்தைக்கு மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை அளித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து பட்டேல் சிசிடிவி காட்சியை பார்த்த போது குழந்தையின் பராமரிப்பாளர் குழந்தையை அடித்து துன்புறுத்துவதுடன், படுக்கையில் தூக்கி வீசுவது போன்ற காட்சிகள் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இந்த சிசிடிவி காட்சியின் ஆதாரங்களைக் கொண்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.மேலும் அந்த குழந்தை பராமரிப்பாளரிடம் விசாரணை நடத்தியதில் விரக்தியில் குழந்தையை கொடுமைப்படுத்தியதாக போலீசில் தெரிவித்துள்ளார்.