Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பயிர் காப்பீடு கணக்கெடுப்பு…. மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி ….!!

 வேளாண்மை மாணவர்களுக்கு பயிர் காப்பீடு கணக்கெடுப்பு  பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில் பயிர் காப்பீட்டு் கணக்கெடுப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண்மை உதவி இயக்குனர் ரவிசங்கர், வேளாண் அலுவலர் சுமதி, மற்றும் மாணவர்கள்  சபரி வாசன், லட்சுமணன், சரவணகுமார், பிரேம் லியோ, கோகுல்நாத், கணபதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் வேளாண்மை இயக்குனர் ரவி சங்கர் மாணவர்களுக்கு பயிர்  காப்பீட்டு கணக்கெடுப்பு பற்றியும், புள்ளியல் துறை காப்பீட்டு துறை உள்ளிட்ட துறைகளில் வேளாண்மை எவ்வாறு பங்களிக்கிறது என்பது பற்றியும் விளக்கி  கூறியுள்ளார்.

Categories

Tech |