காரைக்கால் நாகையை சேர்ந்த 21 மீனவர்களின் காவலை இலங்கை நீதிமன்றம் நீட்டித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1974-இல் இந்தியா இலங்கை நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையேழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி இந்தியா கட்சத் தீவை விட்டுக்கொடுத்தது. இதனால் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமமும், சுதந்திரமும் வழங்கப்பட்டது. 1976-இல் மீண்டும் ஒரு ஒப்பந்தம் இந்தியா இலங்கை இடையே ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமம் பறிக்கப்பட்டதாக இலங்கை அறிவித்தது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தின் 6-வது பிரிவில் இரு நாட்டு மீனவர்கள் காலம் காலமாக அனுபவித்து வந்த உரிமைகளை அனுபவிக்கலாம் என்று உள்ளது. 1969-இல் வியன்னா உடன்படிக்கையின் விதி 6-இல் விளக்கப்பட்டுள்ளதன்படி, ஒப்பந்த முக்கிய அம்சத்தை ஏதாவது ஒரு நாடு மீறும் போது மற்ற நாடு உடன்படிக்கையை ரத்து செய்யவோ, தற்காலிகமாக நிறுத்திவைக்கவோ உரிமை உண்டு. 5000 சதுர கி.மீ கொண்ட இலங்கை கடற்கரையில் 150 சதுர கி.மீட்டர் வரை தமிழக மீனவர்கள் எல்லை தெரியாமல் மீன் பிடிக்கின்றனர்.
இந்நிலையில் பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி வரை காரைக்கால் நாகையை சேர்ந்த 21 மீனவர்களின் காவலை இலங்கை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பருத்தித்துறை நீதிமன்றம் சிறையிலுள்ள 21 மீனவர்களின் காவலை இரண்டாவது முறையாக நீட்டித்துள்ளது.