தேமுதிக சார்பாக கோபி, சத்தியமங்கலம், பவானி நகராட்சிகளில் ஒரு வேட்பாளர் கூட போட்டியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்புமனுத்தாக்கல் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இதில், சத்தியமங்கலம் நகராட்சியில் இருக்கும் 27 வார்டுகளில் போட்டியிடுவதற்கு, அ.தி.மு.க, தி.மு.க, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், பாமக மற்றும் பல கட்சிகளில் இருந்து மொத்தமாக 142 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
ஆனால், தேமுதிக, சத்தியமங்கலம் நகராட்சியில் இருக்கும் 27 வார்டுகளில் எதிலும் போட்டியிடவில்லை. இது தொண்டர்களை வருத்தமடையச் செய்திருக்கிறது. கோபி செட்டிபாளையம் நகராட்சியில் 30 வார்டுகள் இருக்கிறது. இதில் மொத்தமாக சுமார் 150 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
ஆனால், இதிலும் தேமுதிக போட்டியிடவில்லை. கடந்த முறை தேமுதிக சார்பாக களமிறங்கிய 2 பேர் வெற்றியடைந்து கவுன்சிலராக பதவி வகித்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த தேர்தலில் தேமுதிக களமிறங்காதது கட்சியினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.