Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு மீண்டும் இணைய சம்மதம் தா”…. ஆனா பிகு பண்ணும் தனுஷ்…. கவலையில் ரஜினி….!!!

ஐஸ்வர்யா மீண்டும் தனுஷூடன் வாழ சம்மதம் தெரிவித்த நிலையில் அவருடன் வாழ முடியாது என திட்டவட்டமாக தனுஷ் கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஐஸ்வர்யாவின் வாழ்க்கை பற்றிய கவலையினால் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். இதனால் ஐஸ்வர்யா மீண்டும் தனுஷூடன் வாழ சம்மதம் தெரிவித்துள்ளாராம். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருட குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து இருக்கின்றனர். தற்போது அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவர்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இதைத்தொடர்ந்து தனுஷின் நடவடிக்கை சரியில்லை என செய்தி வந்த நிலையில் இன்னொரு பக்கம் ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர் தனுசை டார்ச்சர் செய்வதாக செய்திகள் வெளிவந்தன. இதில் எது உண்மை என்பது தெரிவதற்குள் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ஐஸ்வர்யா தொலைபேசியின் மூலம் கஸ்தூரி ராஜாவை தொடர்பு கொண்டு தனது அப்பா ரஜினி அவர்கள் தனிப்பட்ட முறையில் தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது ஆதங்கங்களை கொட்டி தீர்த்ததாகவும் அதன் பிறகு ஐஸ்வர்யா அப்பாவின் பெயரை காப்பாற்ற தனுஷுடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்துள்ளதாகவும் கஸ்தூரி ராஜாவிடம் கூறியிருக்கிறார். இதுகுறித்து கஸ்தூரி ராஜா இதுதான் சரி இருவரையும் சேர்த்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தது மட்டுமல்லாமல் பத்திரிக்கையாளர்கள் தான் இப்படி உங்களைப் பற்றிய செய்திகளை பேசுகின்றனர்.இதனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மீண்டும் ஏதாவது ஒரு கோயிலுக்கு சென்று வாருங்கள் என ஐஸ்வர்யாவிடம் கூறியுள்ளாராம்.

ஆனால் இந்த விஷயத்தை தன் மகன் தனுஷிடம் சொல்லவில்லை போல, இதனை அறிந்த தனுஷ் யாரை கேட்டு இதெல்லாம் முடிவு செய்கிறீர்கள் இனிமேல் அவருடன் சேர்ந்து வாழ முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம். இதனால் ஐஸ்வர்யாவின் குடும்பத்திற்கு தனுஷின் மீதான நன்மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாகவும் இதற்காக ரஜினி கவலை அடைத்திருக்கிறாராம். மேலும் ரஜினி மற்றும் தனுஷ் இருவருக்கிடையில் பெரிய பிளவு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்று சினிமா வட்டாரங்களில் பேசுகின்றார்களாம்.

Categories

Tech |