Categories
தேசிய செய்திகள்

அட்ராசக்க…! 2-வதும் பெண்குழந்தை பிறந்தால்…. கர்ப்பிணிகளுக்கு செம சூப்பர் நியூஸ்…!!!!

இரண்டாவது பிரசவத்தில் பெண் குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு பிரசவகால சலுகைகளை வழங்க மத்திய அரசு  திட்டமிட்டுள்ளது.

பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக ரூபாய் 5,000 உதவித் தொகை, மருத்துவ வசதிகள் மற்றும் ஊட்டச்சத்து உணவு போன்றவை  கர்ப்பகாலத்தில் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன.

இந்த சலுகைகள் எல்லாம் முதல் பிரசவத்திற்கு மட்டும் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது பிரசவத்தில் பெண் குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இச்சலுகைகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றி பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, பெண் குழந்தை பிறப்பதை தவிர்க்க பாலினத்தை அறிய செய்யும் முயற்சியை கைவிடும்  நோக்கில் இந்த சலுகைகள்  வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |