மகாராஷ்டிரா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் மது விற்பனைக்கு அரசு அனுமதி வழங்கியது. மேலும் மதுவில் குறைந்த அளவே ஆல்கஹால் இருக்க வேண்டும். அதேபோல் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது.
இந்த நிலையில் சமூக சேவகரான அண்ணா ஹசாரே இந்த சட்டம் இளம் தலைமுறையினரை சீரழிக்கும். எனவே உடனடியாக இதனை ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவேன் என்று கூறியுள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.