Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! பிப்-15 முதல் ஊரடங்கு வாபஸ்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!!

நாட்டில் ஓமைக்ரான் பரவல் குறைந்து வருவதையடுத்து வருகிற பிப்ரவரி 15 முதல் அசாம் மாநிலத்தில் ஊரடங்கு வாபஸ் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இந்த மாதம் 15 முதல் ஊரடங்கு வாபஸ்  என செய்தியாளர்கள் சந்திப்பில் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ  சர்மா தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் பிப்ரவரி 15 முதல் திரும்ப பெறப்படுவதாக கூறினார்.

மேலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும்  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தியுள்ளார் . இதனைத் தொடர்ந்து வருகிற ஏப்ரல் மாதம் மாநிலத்தில் உள்ள மற்ற நகராட்சியை வாரிய தேர்தலுடன், குவஹாத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் கர்பி அங்லாங் தன்னாட்சி கவுன்சில் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |