சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாலத்தீவு அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பம் 22 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்றும், தமிழ்நாட்டில் இயல்பை விட பருவமழை 2% கூடுதலாக பெய்துள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.