Categories
அரசியல்

அப்படி போடு…! வாபஸ் வாங்குனா இத்தனை லட்சமா…? இந்த கூத்து எங்க தெரியுமா…?

வேலூர் மாநகராட்சி தேர்தலில் வேட்பு மனுவை வாபஸ் செய்த வேட்பாளர்களுக்கு 5 முதல் 10 லட்சம் ரூபாய் கொடுக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாநகராட்சியில் இருக்கும் 60 வார்டுகளில் தி.மு.க, அ.தி.மு.க, பாஜக உட்பட பல கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். மொத்தமாக 505 வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 33 மனுக்களை நிராகரித்துள்ளனர். வேட்பு மனு தாக்கலை வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாள்.

எனவே, மாலை 5 மணியளவில் இறுதி வேட்பாளர் பட்டியலும், சின்னங்களும் ஒதுக்கப்படுகிறது. பலமான வேட்பாளர்கள் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி, காசு கொடுத்து பிற வேட்பாளர்களை  வாபஸ் பெற வைக்க பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இது தொடர்பில், தேர்தல் அலுவலர்கள் தெரிவித்ததாவது, வேலூர் மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் வேட்பாளர் ஒருவருக்கான தேர்தல் செலவானது, ஒரு கோடி ரூபாயாக இருக்கிறது.

போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த பணம் அப்படியே கிடைக்கும். தங்கள் வார்டில் இருக்கும் வேட்பாளர்கள் யாரேனும் வாபஸ் பெற்றால், அவர்களது கட்சியின் பலத்தை வைத்து பத்து லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை கொடுக்கிறார்கள். எனவே, பல பேர் கிடைத்த வரைக்கும் லாபம் என்று பணத்தை வாங்குகிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |