Categories
அரசியல்

பாஜகவின் பக்கா பிளான்…. “தாமரை மலர்ந்தே தீரும்”…. அண்ணாமலை பரபரப்பு பேச்சு….!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, ஆளும் கட்சியான திமுக இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதற்கிடையே பாஜக அதிமுகவிலிருந்து விலகி தனித்து தேர்தலில் களம் காண உள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், ” அடுத்த 11 நாட்கள் போர்களம் போல் இருக்கும். என்ன நடந்தாலும் பாஜக வேட்பாளர்கள் தளர்ந்து விடக்கூடாது. ஒருநாள் தமிழ்நாட்டில் தாமரை மலரும். போர்க்களத்தில் முழு மூச்சாக பணியாற்ற வேண்டும். இந்த முறை நகராட்சி தேர்தலில் பாஜகவில் மிக திறமையானவர்களை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |