Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்…. தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு…. பாகிஸ்தான் வீரர்கள் பலி…!!!

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தானை சேர்ந்த 5 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இருந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த வீரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் குர்ரம் மாவட்டத்தில் இருந்த பாகிஸ்தானை சேர்ந்த 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல பாகிஸ்தானை சேர்ந்த வீரர்களும், தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், அவர்களுக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு தெஹ்ரீக் ஐ என்ற தலிபான் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

Categories

Tech |