பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அபிஷேக் வருவதாக தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின்5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதனையடுத்து தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் விட அதிக பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
அடுத்தடுத்த டாஸ்க்குகள், சண்டைகள் என அதிரடி விஷயங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் அபிஷேக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் ”நீங்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வர வாய்ப்பு இருக்கா?” என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், ”ஆமா இந்த வாட்டி சாக்கு மூட்டைகளை அனுப்பறாங்க” என பதிலளித்துள்ளார்.