சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் 17 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் தாயார் உடல்நிலை சரி இல்லாதவர் என்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்க வந்த டாக்டர் மோகன் குமார் சிறுமிக்கு பாலியல் சொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் மோகன் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.