Categories
உலக செய்திகள்

இனி சிங்கிள் டோஸ் போதும்… 3 டோஸ் வேண்டாம்… மத்திய அரசு அனுமதி…!!!

இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு ஒன்றிய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு, ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு  அனுமதி அளித்துள்ளது.

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி  இந்தியாவின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட 9-வது தடுப்பூசி என்று மாண்டவியா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்புட்னிக் லைட் ஒரு தவணை தடுப்பூசிக்கு டிசிஜிஐ அவசரகால பயன்பாட்டிற்கான  அனுமதியை வழங்கி இருப்பதை உறுதி செய்ததாக பதிவிட்டுள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த கமலயா தொற்று நோய்கள் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் இந்த தடுப்பூசியை தயாரித்து பல்வேறு நாடுகளுக்கு விநியோகித்தும் வருகிறது. ஸ்புட்னிக் லைட் கொரோனா கிருமிக்கு எதிராக 65% மேல் பலன் தருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை  இந்தியாவில் நடத்த கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணப்பித்திருந்தது.

ஆனால் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்கள் குழு, ஏனைய தரவுகள் சமர்பிக்கப்படாத நிலையில் இதற்கு அனுமதி மறுத்தது. இதனையடுத்து தடுப்பூசியின் செயல்திறன் தொடர்பான தரவுகள், பாதுகாப்பு அளிக்கப்பட்டதால் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு ஒப்புதல் அளித்தது. இதுவரை இந்தியா உட்பட 29 நாடுகளில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கிடைத்துள்ளதாக ரஷ்யாவை சேர்ந்த கமலாயா ஆராய்ச்சி  நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |