பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத், தன் மகன் இளவரசர் சார்லஸ் மன்னராகும் போது, அவரின் மனைவியான கமிலா ராணி ஆவார் என்று தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டன் ராணியாக கடந்த 1952ம் வருடம் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி அன்று இரண்டாம் எலிசபெத் முடிசூடினார். அந்த ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கடந்த பல வருடங்களாக ராஜ குடும்பம் குறித்து ஆய்வு நடத்தி வரும் நிபுணர்கள், இளவரசர் சார்லஸ் மன்னரானாலும், அவரின் மனைவியான கமிலா பார்க்கர், இளவரசியாக தான் இருப்பார் என்று கூறினர்.
தற்போது மகாராணியார் இரண்டாம் எலிசபெத் அறிக்கை வாயிலாக, கமிலா, பிரிட்டன் ராணியாக இருப்பதைத்தான் தான் விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். தன் மகன் சார்லஸ் பிரிட்டன் மன்னராக முடி சூடும் போது அவரின் மனைவியான கமிலா, பிரிட்டன் மகாராணியாக அறிவிக்கப்படுவார் என்றும் தனக்கு கொடுத்த ஆதரவை தன் மகன் மற்றும் மருமகளுக்கும் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.