தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வேட்பமனு தாக்கல் பரிசீலனை முடிவடைந்துள்ள நிலையில், ஏற்கப்பட்ட வேட்பாளர்கள் தாக்கல் செய்த, “அபிடேவிட்” எனும் சொத்து விபரங்கள், குற்ற வழக்குகள் உள்ளிட்ட பயோடேட்டா அடங்கிய பட்டியலை பொதுமக்களும் பார்க்கும் அடிப்படையில் தேர்தல் ஆணையம் வசதியை கொடுத்துள்ளது..
இதற்காக தேர்தல் ஆணையத்தின், https://tnsec.tn.nic.in/nomination_view_urban2021/ என்ற இணையதள பக்க லிங்கை கிளிக் செய்து அதில் உங்கள் மாவட்டத்தினை செலக்ட் செய்ய வேண்டும். இதையடுத்து அதில் மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் என்று இருக்கும் அதில் உங்கள் தேவையை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து வரும் பகுதியில் உங்கள் வட்டத்தை செலக்ட் செய்து, அதில் உங்கள் ஊரை செலக்ட் செய்து, அதில் உங்கள் வார்டை கிளிக் செய்து Captcha-வை டைப் செய்து தெரிந்து கொள்ளலாம். அதன்பின் விரும்பும் வேட்பாளரின் புரொபைலை கிளிக் செய்தால் அனைத்து தகவலையும், டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதில் அந்த தொகுதியில் எந்தெந்த கட்சி, எந்தெந்த வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் யார்..? அனைவரது சொத்து மதிப்பு, அவர்கள் மீதுள்ள குற்றவழக்கு விபரங்கள் என அனைத்தையும் எளிதில் பார்க்கலாம்.