4 அடி நீளமுடைய நாகபாம்பை பெண் கையால் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குமாரமங்கலம் பகுதியில் கற்பகம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டின் அருகில் 4 அடி நீளமுடைய நாகப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனைப் பார்த்த கற்பகத்தின் தங்கை சுமதி அதை தனது கையால் பிடித்து ஒரு டப்பாவில் போட்டு அடைத்து வைத்துள்ளார்.
இதனையடுத்து வனத்துறையினருக்கு இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் நாகபாம்பை மீட்டு அருகில் இருக்கும் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.