Categories
உலக செய்திகள்

கட்டாய தடுப்பூசி திட்டத்தை எதிர்த்து கடும் போராட்டம்…. நிலைகுலைந்து போன தலைநகர்…. அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு….!!!

கனடாவில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கனடா நாட்டின் எல்லையை கடந்து செல்லக்கூடிய லாரி ஓட்டுனர்கள் கொரோனோ விற்கு எதிரான தடுப்பூசியை கட்டாயமாக செலுத்தியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகரான ஒட்டாவாவில், ‘சுதந்திர தின வாகன அணிவகுப்பு’ என்று லாரி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சுமார் பத்து நாட்களாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மக்களின் இந்த ஆர்ப்பாட்டம், ‘உண்மைக்கு ஒரு அவமானம்’ என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று தலைநகரை முற்றுகையிட்டு கட்டாய தடுப்பூசியை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினார்கள்.

இதனால், நகரமே நிலைகுலைந்து போனது. இந்நிலையில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்காக, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக அந்நகரின் மேயரான ஜிம் வாட்சன் நேற்று அறிவித்திருக்கிறார்.

Categories

Tech |