அதிதி ஷங்கர் இணையத்தில் வெளியிட்ட விடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்றால் ஞாபகம் வருவது இயக்குனர் சங்கர்தான். சங்கர் 1993-ஆம் வருடம் “ஜென்டில்மேன்” திரைப்படத்தை இயக்கினார். இவரின் முதல் படமான “ஜென்டில்மேன்” மாபெரும் வெற்றியை இவருக்கு ஈட்டித் தந்தது. இயக்குனர் ஷங்கர் 28 வருடங்களாக சினிமா துறையில் பயணித்து வருகிறார். இருப்பினும் இவர் குடும்பத்திலிருந்து யாரும் சினிமாத்துறைக்கு வரவில்லை. இப்போதுதான் ஷங்கரின் இளைய மகளான அதிதி சங்கர் சினிமா துறைக்குள் வந்துள்ளார். அதிதி ஷங்கர், முத்தையா இயக்குகின்ற “விருமன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கின்றார்.
அதிதி சங்கர் அண்மையில்தான் டாக்டர் படிப்பை முடித்துள்ளார். இவர் தற்போது விருமன் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். அடுத்து சிம்பு கதாநாயகனாக நடிக்கும் “கொரோனா குமார்” படத்தில் இவர் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தற்போது அதிதி ஷங்கர் இணையத்திலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அதிதி தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்கள் வீடியோக்கள் என அவ்வப்பொழுது பதிவிடுவார். தற்போது அவர் போட்டோ ஷூட் செய்வது போல வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.