மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வைத்து சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கூட்டமானது மாவட்ட நீதிபதி தனசேகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதில் முதன்மை சார்பு நீதிபதி செல்வம் ஜேசுராஜ், பார் கவுன்சில் செயலாளர் திருமலையப்பன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் கணேசன், பாலசுப்பிரமணியன், மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் நீதிபதி தனசேகரன் குழந்தை திருமணத்தை தடுத்தல், போக்சோ சட்டம் மற்றும் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.