சூர்யாவின் வாழ்க்கையை மாற்றிய நடிகர் பிரபலத்தின் வார்த்தைகள்.
தமிழ் சினிமாவுலகில் சூர்யா முன்னணி நடிகராக வலம் வருகிறார். சூர்யா, தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் புதுவிதமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அண்மையில் வெளிவந்த “ஜெய்பீம்”, “சூரரைப்போற்று” போன்ற திரைப்படங்கள் சூர்யாவுக்கு மாபெரும் வெற்றியை தந்துள்ளது. தற்போது சூர்யா பாண்டிராஜ் இயக்குகின்ற” எதற்கும் துணிந்தவன்” திரைப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. தொடக்க காலகட்டத்தில் சூர்யா நடித்த பொழுது நடிப்பு, நடனம் அவ்வளவாக சரி இல்லை என விமர்சனங்கள் எழுந்திருந்தன. அவரின் திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
தொடக்க காலத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகர் ரகுவரன் நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொள்வாராம். ரகுவரன் சூர்யாவைப் பார்த்து உனக்கு நன்றாக இரவில் உறக்கம் வருகிறதா என கேட்டிருக்கிறார். நம்மைப் பற்றி இழிவாக பேசுபவர்களின் வாயை நம் வெற்றியின் மூலம் அடைக்க வேண்டும். விமர்சித்து பேசுபவர்களுக்கு உனது வெற்றி ஒரு பாடமாக இருக்க வேண்டும் .அப்பொழுது தான் உனக்கு இரவில் நன்றாக உறக்கம் வரும் என்று கூறியிருக்கிறார். ரகுவரன் கூறியது சூர்யாவுக்கு நல்ல உந்து கோலாக அமைந்தது. அதன் பிறகு கடுமையான விடாமுயற்சியோடு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிதாமகன், காக்க காக்க, ஆறு, வேல், வாரணம் ஆயிரம் என அடுத்தடுத்து புது விதமான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி படங்களாக மாற்றினார். தற்போது முன்னணி நடிகர், முன்னணி தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார்.