Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏரியில் கிடந்த சடலம்…. பொதுமக்கள் அதிர்ச்சி…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஏரியில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் பகுதியில் இருக்கும் ஏரியில் இளம்பெண் சடலமாக மிதந்தை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலமாக மிதந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணை நடத்தியதில் அந்தப் பெண் யுவராணி என்பதும், அவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |