”தளபதி 66” படத்தின் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது ”பீஸ்ட்” படம் உருவாகியுள்ளது. இதனையடுத்து இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ”தளபதி 66” வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்தின் கதையை கேட்டு தளபதி விஜய் அசந்து போனதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் விஜய் எரோட்டா மேனியா என்ற நோயால் பாதிக்கப்பட்டவராம். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னை ஒருவர் காதலிப்பதாக நினைத்து கொண்டு அவர் மீது தீவிரமாக அன்பு செலுத்துவார்களாம். இந்த கதைதான் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.